விண்டோஸ் எக்ஸ்பியில் ஸ்டார்ட் பட்டன் மூலம் நமது புரோக்கிராம்களை எக்ஸ்புலோர் செய்வோம். அந்த ஸ்டார்ட் பட்டனில் நீங்கள் விரும்பிய புனை பெயர்களை(அ)உங்கள் பெயரையோ இட்டுக்கொள்ளலாம்.
முதலில் “explorer.exe” எனும் பைலினை நாம் எடிட் செய்ய வேண்டும். “explorer.exe” பைலானது “C:\Windows” டைரக்ரியில் இருக்கும். Explorer.exe ஐ காப்பி செய்து D பார்டீஷன் அல்லது உங்கள் பென் டிரை வில் Explore.exe (அ) Explore1.exe என சேமித்துக் கொள்ளவும். இந்த Explorer.exe ஆனது ஒரு பைனரி பைல் ஆகும் இதனை எடிட் செய்வதற்க்கு Resource Hacker TM சாஃப்ட்வேர் தேவை படுகிறது. இது ஒரு இலவச மென் பொருளாகும். இது வெறும் 518 KB ஆகும்.
http://www.angusj.com/resourcehacker/
நீங்கள் இந்த லிங்க் மூலம் Resource Hacker TM ஐ டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
டவுன்லோடு செய்த போல்டரை பிரித்தெடுத்து ResHacker.exe எனும் பைலை இருமுறை கிளிக் செய்து C:\Windows\explorer.exe ஓபன் செய்யவும்.
படம்:-1

மேலுள்ள விண்டோவில் String table - 37 - 1033 கிளிக் செய்ய (படம்:-2 ல் உள்ளது போல தோன்றும்)
படம்:-2

படம்:-3
இதில் வலது புறத்தில் உள்ள Text Area - ல் 578 , “start” -ஐ செலக்ட் செய்து உங்கள் பெயரை டைப் செய்யவும். பின்னர் Compile Script பட்டனை அழுத்துவதன் மூலம் Script ஆனது Compile ஆகும். பின்னர் File - Save As என தெரிவு செய்து C:\Windows \inf என்ற போல்டரில் explorer.exe என சேவ் செய்யவும். பார்க்க படம் :- 4
(உங்கள் பெயரை டைப் செய்தவுடன் Compile Script செய்து Save As செய்ய வேண்டும். கண்டிப்பாக Save செய்ய கூடாது பார்க்க படம் :- 4)
inf போல்டர் தெரியவில்லை எனில் போல்டர் ஆப்ட்ஷனில் Show hidden files என தெரிவு செய்து C:\Windows\inf \explorer.exe Save செய்யுங்கள்.
படம்:-4
நீங்கள் “explorer.exe” சேவ் செய்த பின்னர் உங்கள் Registry ல் ஒரு சிறிய மாற்றம் செய்யவேண்டும் Start - Run - Regedit என டைப் செய்ய Registry விண்டோ திரையில் தோன்றும்.
அதில் HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows NT\ CurrentVersion\ Winlogon என்ற பாத்தில் Shell -ஐ இருமுறை கிளிக் செய்து Value Date வை inf/explorer.exe என மாற்றவும் பார்க்க படம்:-6
படம்:-5
படம்:-6
நீங்கள் Value Date வை மாற்றிய பின்னர் உங்கள் ரெஜிஸ்ட்ரி எடிட்டாரில் படம் 7 உள்ளது போல தோன்றும்.
படம்:-7
தற்பொழுது ரெஜிஸ்ட்ரி எடிட்டரை மூடிவிட்டு. உங்கள் கணிணியை லாக் ஆஃப் (அ) ரீ-ஸ்ராட் செய்யவும்.இதை செய்துபார்ப்பதில் மிகவும் கவணம் தேவை.
Article Source www.theeldergeek.com