Monday, January 21, 2008

எங்கள் ஊர்

ஆயங்குடி கிராமம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. எங்கள் ஊரில் முதன்மை தொழில் விவசாயமாகும் , ஊரின் மக்கள் தொகை 7500 க்கும் மேல் , பெரும்மாலான இளைஞர்கள் கல்வி மற்றும் தொழில் துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் எங்கள் ஊரில் தண்ணீர் வசதி அனைத்து வீடுகளுக்கும் ஊரில் உள்ள பெரிய பள்ளி வாசல் மற்றும் நடு பள்ளி வாசல் குடி நீர் தொட்டி மூலம் தடையின்றி வழங்க படுகின்றது இதனால் மக்கள் எளிதாக தண்ணீர் வசதி பெருகின்றனர்.

எங்கள் ஊரில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெறும் மாணவ , மாணவிகளுக்கு ஊரில் உள்ள ஒரு அறக்கட்டளையின் சாற்பாக சன்மாணம் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது மேலும் முதலிடம் பெற்ற மாணவ , மாணவியரின் பெயரினை பள்ளியின் சுவற்றில் அச்சிடுகின்றனர் இது கால சுவட்டில் நிலைத்து நின்று அவர்களை பெறுமை படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆயங்குடியில் உள்ள தொண்டு நிறுவணங்கள் மூலம் ஆண்டுக் கொரு முறை ஏழை மாணவர்களுக்கு இலவச பாட ஏடுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப் படுகின்றது இது பெருமைக்குறிய விசயமாகும்.

கல்விக்கடன் பெறுவது எப்படி?

நமது மாநில அரசும் மத்திய அரசும் கல்வி கடன் வழங்கி வருகின்றது. நம்மில் பலருக்கு இந்த கல்விக்கடனை பற்றிய விபரம் தெறியாமல் தமது , பிள்ளைகளின் கல்வியை வீணடித்து விடுகின்றனர் சில பெற்றோற்கள்.

1.முதலில் உங்கள் பெற்றோருக்கு உள்ளூர் வங்கி கணக்கு அவசியம் இருத்தல் வேண்டும்.
2.நீங்கள் கல்லூரியில் சேரும் முன்னரோ அல்லது சேர்ந்த பின்னறோ கூட நீங்கள் கல்விக்கடன் பெறலாம்.
3.உங்கள் உள்ளூர் வங்கியில் வங்கி மேளாளரை அணுகி உங்களை முதலில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் அவ்வமயம் உங்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அவசியம் இருத்தல் வேண்டும்.
4.பின்னர் உங்கள் கல்லூரியில் உங்கள் படிப்பிற்கான செலவு தொகை ஆண்டு கட்டண விபரம் மற்றும் நீங்கள் விடுதியில் தங்கி பயிலும் மாணவராயின் விடுதி கட்டண விபரங்களை யும் பெறவேன்டும்.
5.கல்லூரியில் இருந்து பெறபட்ட விபரங்களை வங்கி மேளாளரிடம் சமர்பித்து உங்களுக்கான கடன் உதவி தொகையை எளிய முறையில் பெறலாம்.
6.பின்னர் உங்களுக்கான கடன் உதவி தொகை நேரடியாக கல்லூரி முதல்வர் அவர்களுக்கு காசோலையாக உங்களிடம் வழங்கப்படும்
7.இந்த கடன் உதவிக்கான ஆண்டு வட்டி விகிதம் இந்தியன் வங்கியில் 12% ஆகும். வங்கிக்கு வங்கி இந்த வட்டி விகிதம் மாறுபடும்
8.உங்கள் கல்விக் கடனை ஐந்து ஆண்டுகளுக்குள் வங்கிக்கு திருப்பி செலுத்துதல் அவசியமாகும்.

9.மேலும் விபரங்களுக்கு http://www.indian-bank.com/educational_loan.htm என்ற முகவரியை அனுகவும்

Sunday, January 20, 2008

கணிணியை காக்கும் சில வழிகள்

நீங்கள் புதிதாக கணிணி வாங்கி உள்ளீர்களா? அல்லது ஏற்கனவே கணிணி வைத்துள்ளீர்களா இதோ உங்கள் கணிணியை எளிதாக காக்கும் சில வழிமுறைகள்....

1.கணிணியை UPS இல்லாமல் உபயோகபடுத்த வேண்டாம்
ஏனெனில் சில நேரங்களில் மின் வெட்டின் காரனமாக உங்கள் கணிணி சேமிப்பகம் பழுதடைய வாய்ப்புள்ளது.
2.கணிணியில் அதிகமான படங்கள் , கேம்ஸ்கள் , இன்னும் தேவையில்லா சில சாஃப்ட்வேர்களை நிறுவுவதை தடுக்கவும்
3.உங்களுக்கு தேவையான சாஃப்ட்வேர்களை நிறுவிய பின் தேவையில்லா சாஃப்ட்வேர்களை உங்கள் Control Panel – Add Remove Program மூலம் அழித்து விடவும்.
4.உங்கள் கணிணியில் Internet இனைப்பு உள்ளதா? அவ்வாறெனில் நீங்கள் கட்டாயம் Anti - Virus நிறுவுதல் வேண்டும்
5.கணிணியை உபயோக படுத்திய பின் கணிணியின் கணிணியின் பவர் கேபிளை பிடுங்கிவிடவும் இல்லை எனில் மதர்போஃர்ட் பழுதடைய வாய்ப்புகள் உள்ளன...

web site hit counter