Monday, March 24, 2008

யாஹூ சாட் ஹிஸ்ட்ரி

ஜி மெயிலில் நீங்கள் சாட் செய்யும் அனைத்து சாட் ஹிஸ்ட்ரியும் உங்கள் ஜி மெயில் கணக்கில் சாட் மெணு மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். யாஹூவிலும் நீங்கள் நண்பரிடம் சாட் செய்ததை சேமித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

யாஹூவில் சாட் ஹிஸ்ட்ரியை எப்படி பயண்படுத்துவது என காணலாம். உங்கள் யாஹூ மெசஞ்சரில் Sign – in  செய்தபின்னர் மெனுவில்.

Messenger

Preferences

Archive - Yes , Save all of my messages - Apply - Ok

image

 

இனி நீங்கள் சாட் செய்யும் அனைத்து நபர்களின் சாட் ஹிஸ்ட்ரியையும் உங்கள் Archive வில் பதிக்கப்பட்டுவிடும். பதிவு செய்ய பட்ட சாட் ஹிஸ்ட்ரிகளை Archive - View Archive செய்து பார்த்துக் கொள்ளலாம். தேவை படுமாயின்  சேவ் கூட செய்து கொள்ளலாம்.

 

image

Saturday, March 22, 2008

உங்கள் பெயர் ஸ்டார்ட் பட்டனில்

 image

விண்டோஸ் எக்ஸ்பியில் ஸ்டார்ட் பட்டன் மூலம் நமது புரோக்கிராம்களை எக்ஸ்புலோர் செய்வோம். அந்த ஸ்டார்ட் பட்டனில் நீங்கள் விரும்பிய புனை பெயர்களை(அ)உங்கள் பெயரையோ இட்டுக்கொள்ளலாம்.

முதலில் “explorer.exe” எனும் பைலினை நாம் எடிட் செய்ய வேண்டும். “explorer.exe” பைலானது “C:\Windows” டைரக்ரியில் இருக்கும். Explorer.exe ஐ காப்பி செய்து D பார்டீஷன் அல்லது உங்கள் பென் டிரை வில் Explore.exe (அ) Explore1.exe  என சேமித்துக் கொள்ளவும். இந்த Explorer.exe ஆனது ஒரு பைனரி பைல் ஆகும் இதனை எடிட் செய்வதற்க்கு Resource Hacker TM சாஃப்ட்வேர் தேவை படுகிறது. இது ஒரு இலவச மென் பொருளாகும். இது வெறும் 518 KB ஆகும்.

http://www.angusj.com/resourcehacker/

நீங்கள் இந்த லிங்க் மூலம் Resource Hacker TM  ஐ டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

டவுன்லோடு செய்த போல்டரை பிரித்தெடுத்து ResHacker.exe எனும் பைலை இருமுறை கிளிக் செய்து C:\Windows\explorer.exe ஓபன் செய்யவும்.

படம்:-1

clip_image001

மேலுள்ள விண்டோவில் String table - 37 - 1033 கிளிக் செய்ய (படம்:-2 ல் உள்ளது போல தோன்றும்)

படம்:-2

 image004

படம்:-3

image

இதில் வலது புறத்தில் உள்ள Text Area - ல்  578 , “start” -ஐ செலக்ட் செய்து உங்கள் பெயரை டைப் செய்யவும். பின்னர் Compile Script பட்டனை அழுத்துவதன் மூலம் Script ஆனது Compile  ஆகும். பின்னர் File - Save As  என தெரிவு செய்து  C:\Windows \inf என்ற போல்டரில் explorer.exe  என சேவ் செய்யவும். பார்க்க படம் :- 4

(உங்கள் பெயரை டைப் செய்தவுடன் Compile Script செய்து Save As  செய்ய வேண்டும். கண்டிப்பாக Save செய்ய கூடாது பார்க்க படம் :- 4)

inf போல்டர் தெரியவில்லை எனில் போல்டர் ஆப்ட்ஷனில் Show hidden files என தெரிவு செய்து C:\Windows\inf \explorer.exe  Save செய்யுங்கள்.

படம்:-4

TEG-0021

 

நீங்கள் “explorer.exe” சேவ் செய்த பின்னர் உங்கள் Registry ல் ஒரு சிறிய மாற்றம் செய்யவேண்டும் Start - Run - Regedit என டைப் செய்ய Registry விண்டோ திரையில் தோன்றும்.

அதில் HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows NT\ CurrentVersion\ Winlogon என்ற பாத்தில் Shell -ஐ இருமுறை கிளிக் செய்து Value Date வை inf/explorer.exe என மாற்றவும் பார்க்க படம்:-6

படம்:-5

image008

 

படம்:-6

 

TEG-0024

 

நீங்கள் Value Date வை மாற்றிய பின்னர் உங்கள் ரெஜிஸ்ட்ரி எடிட்டாரில் படம் 7 உள்ளது போல தோன்றும்.

படம்:-7

 TEG-0025

தற்பொழுது ரெஜிஸ்ட்ரி எடிட்டரை மூடிவிட்டு. உங்கள் கணிணியை லாக் ஆஃப் (அ) ரீ-ஸ்ராட் செய்யவும்.இதை செய்துபார்ப்பதில் மிகவும் கவணம் தேவை.

 

Article Source  www.theeldergeek.com

Tuesday, March 18, 2008

ஹிடன் போல்டர்கள் தெரியவில்லையா?

நீங்கள் போல்டர் ஆப்ட்ஷனில் “SHOW HIDDEN FILES AND FOLDERS” என தெரிவு செய்தும் ஹிடன் செய்த போல்டர்கள் தெரியவில்லையா?

அப்படியானால் உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளது. இந்த வகை வைரஸ் ஆனது பெரும்பாலும் உங்கள் பென் டிரைவினால் ஏற்படுகின்றது. போஃல்டர்களில் வைரஸ் தாக்கினால் நாம் ஆண்டி-வைரஸ் உதவியுடன் அழிக்கலாம் ஆனால் ஒரு சில ஆண்டி-வைரஸ்களே வைரஸ்களை முற்றிலும் அழிக்கும் தன்மையுடையது. இந்த வைரசானது முதலில் உங்கள் ரெஜிஸ்ட்ரியை தாக்கும். உங்கள் ரெஜிஸ்ட்ரியை தாக்கிவிட்டால் உங்களால் ஹிடன் போல்டர்களை காண இயலாது.

வைரஸால் தாக்கப்பட்ட ஹிடன் போல்டர்களை மீண்டும் காண்பதற்க்கு நீங்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்யவேண்டி வரும். ஆனால் இது மிகவும் சிக்கல் வாய்ந்தது. நீங்கள் “kill_amvo_virus_usb_en.vbs” எனும் வி.பி ஸ்கிரிப்ட் மூலம் எளிதில் போஃல்டர் வைரஸ்களை அழித்துவிடலாம்.

எனது கணிணி இரு நாட்க்களுக்கு முன் இந்த போல்டர் வைரஸால் தாக்கப்பட்டது நான் “kill_amvo_virus_usb_en.vbs” உதவியுடன் எளிதில் தீர்த்தேன்.


http://www.mygeekside.com/downloads/2007/12/kill_amvo_virus_usb_en.vbs

மேலே உள்ள லிங்க் மூலம் நீங்கள் “kill_amvo_virus_usb_en.vbs” டவுன்லோடு செய்து கொள்லாம்.

நீங்கள் டவுன்லோடு செய்த “kill_amvo_virus_usb_en.vbs” - ஐ டபுள் கிளிக் செய்து ரன் செய்யவும். தற்பொழுது உங்கள் கணிணியில் இருந்து முழுதாக போல்டர் வைரஸ்கள் நீக்கப்பட்டிருக்கும்.

உங்கள் கணிணியில் வைரஸ் இருந்தால் ஸ்கிரிப்ட்டை முயன்றுபாருங்கள் 100 % வேலை செய்யும்.

Monday, March 17, 2008

ஆக்டிவ் விண்டோ ஸ்கிரீன் கேப்ட்சர்

பொதுவாக நாம் ஸ்கிர்ன் – ஐ கேப்ட்சர் செய்வதற்க்கு “PRINT SCREEN” கிளிக் செய்து பின்னர் பெயின்ட் புரோக்ராமில் பேஸ்ட் செய்வோம். இவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் கேப்ட்சர் செய்த விண்டோவுடன் உங்கள் சிஸ்டம் டாஸ்க்பாரில் மினிமைஸ் செய்த விண்டோக்களுக்கும் தெரியும்.


ஆக்டிவ் விண்டோவை மட்டிலும் நீங்கள் கேப்ட்சர் செய்வதற்க்கு “ALT + PRINT SCREEN” கிளிக் செய்து பின்னர் பெயின்ட் – ல் பேஸ்ட் செய்ய நீங்கள் தெரிவு செய்த விண்டோ மட்டிலும் பேஸ்ட் ஆகும் மற்ற மினிமைஸ் செய்த விண்டோக்கள் மற்றும் சிஸ்டம் டாஸ்க்பாரும் தெரியாது.

Sunday, March 16, 2008

கீ-போர்டே மவுஸாக பயன்படுத்தலாம்

நீங்கள் மவுஸ் இல்லாமல் உங்கள் கீ-போர்டையே மவுசாக பயன்படுத்தலாம். ஆம் உங்கள் கீ-போர்டில் Alt+Shift+NumLock ஒரு சேர அழுத்தவும். உங்கள் திரையில் தற்பொழுது படம் :- 1 உள்ளது போல் தோன்றும்.


படம்:-1




இதில் OK வை கிளிக் செய்யவும். நீங்கள் OK கிளிக் செய்தபின்னர் படம் - 2 ல் உள்ளது போல் உங்கள் மவுஸ் ப்ராப்ர்டீஸ் திரையில் தோன்றும்.

படம்:-2


Mouse – Use Mouse Keyboards – Check - Apply

பாயிண்டர் ஸ்பீடை அதிகமாக்க நீங்கள் உங்கள் மவுசை எப்படி பயன்படுத்துவீரோ அதேபோல் நீங்கள் உணர்வீர்கள்.

உங்கள் கீ-போர்டின் வலது புறத்தில் உள்ள 1,2,3,4,6,7,8,9 எண்களின் உதவியுடன் உங்கள் மவுஸ் பாயிண்டரை நீங்கள் விரும்பும் இடத்திற்க்கு மேலும் , கீழும் எளிதாக நகர்த்த இயலும்.

"5" – ஆம் எண் ஒரு முறை கிளிக் செய்வதற்கும் , "+" குறியானது இருமுறை கிளிக் செய்வதற்க்கும் உதவுகிறது.


கீ-போர்ட் மவுசினை டிசேபிள் செய்ய உங்கள் டாஸ்க்பாரில் கடிகாரத்திற்க்கு அருகில் மவுஸ் ஐகான் தோன்றும். அதில் இரு முறை கிளிக் செய்து.


Mouse – Use Mouse Keyboards – Uncheck - Apply

Saturday, March 15, 2008

பார்டீஷன்களை ஹிடன் செய்வது எப்படி

ஒரு போஃல்டரை ஹிடன் செய்வதற்க்கு நாம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் உங்கள் கணிணியில் உள்ள “ சி , டி “ மற்றும் அனைத்து பார்ட்டீஷன்களையும் எவ்வாறு ஹிடன் செய்வது என பார்ப்போம்.

ஒரு பார்டீஷனை ஹிடன் செய்வதற்க்கு குரூப்பாலிசி எனும் ஒரு வின்டோஸ் யுடிலிட்டி மூலம் மிக எளிதாக ஹிடன் செய்ய இயலும்.

உங்கள் கமாண்ட் ப்ராம்ட் (Start-Run-) ல் gpedit.msc என டைப் செய்ய ஒரு புதிய விண்டோ திரையில் தோன்றும்


Local Group Policy
User Configuration
Administrative Templates
Windows Explorer
Hide these Specified drivers in my computer
Double click
Enabled

Restrict All Drives - அனைத்து பார்ட்டீஷன்களையும் ஹிடன் செய்யவும்.

Restrict C Drive only - சி டிரைவை மட்டிலும் ஹிடன் செய்யவும்.

Restrict D Drive only - டி டிரைவை மட்டினும் ஹிடன் செய்யவும்.

Don’t restrict all Drives - எந்த பார்ட்டீஷனையும் ஹிடன் செய்ய வேண்டாம்.



இவ்வாறு செய்ய நீங்கள் Enable செய்த ஹிடன் டிரைவ்களை மீண்டும் பார்பதற்க்கு.

Local Group Policy
User Configuration
Administrative Templates
Windows Explorer
Hide these Specified drivers in my computer
Double click
Disable


இதனை பயன்படுத்தும் பொழுது மிகவும் கவணம் தேவை. நீங்கள் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின் மின் அஞ்சல் செய்யவும்.



Picture View:-


Sunday, March 9, 2008

ஃபயர் வால்களின் அவசியம்

ஃபயர் வால் நமது கணிணியில் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தினால் அறியமுடியாத புரோகிராம்களை தடுக்ககூடிய ஒரு மென்பொருள், இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்களில் நிருவப்பட்டே வருகிறது. நீங்கள் அடிக்கடி இணையதளத்தினை பயன்படுத்துபவரா இருப்பின் கண்டிப்பாக ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். மேலும் உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.
உங்கள் கனினியில் ஃபயர்வாலை ஆன் செய்ய:-

Control Panel – Security Centre – Windows Firewall - on

Thursday, March 6, 2008

Turn Off Auto-Play

Windows Xp - ல் நீங்கள் சி.டி டிரைவில் சி.டி இட்டவுடன் Auto Play ஆகும்.

சிலருக்கு Auto Play ஆவது பிடிக்காது ஏனில் Auto Play ஆகும் தருணத்தில் கணிணி மிக நேரத்தினை எடுத்துக்கொள்ளும். சரி Auto Play ஆகாமல் இருக்க என்ன செய்வது ?


உங்கள் கமாண்ட் ப்ராம்ட் (Start-Run-) ல் gpedit.msc என டைப் செய்ய ஒரு புதிய விண்டோ திரையில் தோன்றும்

Local Group Policy – User Configuration – Administrative Templates – User Configuration – System – Turn Off Auto Play - Disable

அதில் Turn Off Auto Play ல் இரு முறை கிளிக் செய்து அதனை Disable செய்யவும் தற்போது அனைத்து Window களை யும் முடிவிட சி.டி யை டிரைவில் இட அது தற்போது Auto Play ஆகாது.

Wednesday, March 5, 2008

விண்டோஸ் SKY – DRIVE

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் புதிதாக அறிமுகபடுத்த பட்ட ஒரு வெப் அப்ளிகேஷன். இந்த SKY – DRIVE , இதன் மூலம் உங்களுக்கென தனி சேமிப்பு பகுதியினை பெறலாம். அதில் உங்கள் தனி பட்ட பைல்கள் மற்றும் டாக்குமெட்ஸ்களையும் பாதுகாத்து வைக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் File களை ஷேர் செய்யலாம்.

இந்த அப்ளிகேஷனை உபயோக படுத்த ஹாட்மெயிலில் உங்களுக்கு கணக்கு இருப்பது அவசியம். அவ்வாறு இல்லை எனில் புதிதாக ஒரு கணக்கிணை தொடங்கி உபயோக படுத்தாலாம்.

உங்கள் இண்டர்நெட் எக்ஸ்புலோரரில்
http://skydrive.live.com/ என்ற முகவரியில் டைப் செய்து இதனை பயன்படுத்த இயலும்.



படம் :- 1



வலது புற ஓரத்தில் Sign – in ஐ கிளிக் செயது உங்கள் User name & Password ஐ கொடுத்த பின்னர் .. படம் 2 ல் காட்டியது போல் உங்கள் திரை யில் தெரியும்.


படம் :- 2


இதில் உள்ள போஃல்டர்களில் மூன்று வகை படுத்த பட்டுள்ளன


1.Personal Folders : - நீங்கள் மட்டிலும் அனுக இயலும்.

2.Shared Folders : - உங்கள் நண்பர்களும் அனுகலாம்.

3.Public Folders : - உலகில் யாவராலும் அனுக இயலும்.



இந்த போஃல்டர்களில் எப்படி உங்கள் பைல்களை பதிவு செய்வது? உங்களுக்கான போஃல்டர் ஐ தெரிவு செய்த பின்னர் . வலது புற ஓரத்தில் Add New ஐ கிளிக் செய்க. பின்னர் உங்கள் திரையில் படம் 3 ல் உள்ளது போல் தோன்றும்.


படம் :-3


உங்கள் கணினியில் உள்ள பைல் ஐ தெரிவு செய்தபின்னர் Upload ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பைல் SKY – DRIVE - ல் பதிவிரக்கம் செய்யப்படும். ஒவ்வறு போஃல்டர்களின் ஆப்ஷன்களை யும் நீங்கள் எந்த நேரத்திலும் எளிதில் மாற்ற இயலும்.

ஒரு போஃல்டர்க்குள் நீங்கள் எத்தனை போஃல்டர் களை வேண்டுமானாலும் ஏற்படுத்திக்கொள்ளலாம். போஃல்டர் களின் பெயரை மாற்றவோ , இல்லை அழிக்கவோ
போஃல்டர் ஆப்ஷன் ஐ தெரிவு செய்து மாற்றங்களை செய்ய இயலும்.


Iframe :-

உங்கள் SKY – DRIVE பைல்களை உங்கள் Blog களுக்கு லிங்க் செய்யலாம் அதற்க்கு போஃல்டர் ல் Embed கிளிக் செய்ய படம் 5 திரையில் தோன்றும்


படம்:-4



படம் :- 5

படம் 5 ல் உள்ள HTML – Code ஐ காப்பி செய்து உங்கள் Blog ல் பதிவு செய்த பின்னர்


தற்பொழுது உங்கள் Blog ல் அழகான Iframe தோன்றும் பார்க்க படம் 6


Saturday, March 1, 2008

உபுன்டு லினக்ஸ்

லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் குறுந்தகட்டினை நீங்கள் இலவசமாக பெறலாம். ஆம் தற்போது “உபுன்டு” லினக்ஸ் தபால் வழியில் உங்களுக்கு கிடைக்கின்றது பதினைந்து தினங்களில்.....

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? கீழ் உள்ள வலை தளத்தில் உங்கள் விபரங்கள் மற்றும் உங்கள் முழு முகவரியினை பதிவு செய்து நீங்கள் இலவசமாக பெறலாம்.....

வலை தள முகவரி:-

https://shipit.ubuntu.com/

உபுன்டு சிறப்பம்சங்கள்:-

1.முற்றிலும் இலவசமாக கிடைப்பது (அதுவும் உங்கள் வீடு தேடி)


2. நீங்கள் ubuntu வை அதாவது உங்கள் கணிணி யில் நிறுவாமல் “Live – Mode “ ல் உபயோகப்படுத்துவது.

3.இதில் உள்ள சில அப்ளிகேஷன்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருப்பது

4. Mp3, Mp4, OGG, Avi, JPEG, TIFF, GIF, இன்னும் பல File system களை எளிதாக கையாள்வது....

web site hit counter