Tuesday, March 18, 2008

ஹிடன் போல்டர்கள் தெரியவில்லையா?

நீங்கள் போல்டர் ஆப்ட்ஷனில் “SHOW HIDDEN FILES AND FOLDERS” என தெரிவு செய்தும் ஹிடன் செய்த போல்டர்கள் தெரியவில்லையா?

அப்படியானால் உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளது. இந்த வகை வைரஸ் ஆனது பெரும்பாலும் உங்கள் பென் டிரைவினால் ஏற்படுகின்றது. போஃல்டர்களில் வைரஸ் தாக்கினால் நாம் ஆண்டி-வைரஸ் உதவியுடன் அழிக்கலாம் ஆனால் ஒரு சில ஆண்டி-வைரஸ்களே வைரஸ்களை முற்றிலும் அழிக்கும் தன்மையுடையது. இந்த வைரசானது முதலில் உங்கள் ரெஜிஸ்ட்ரியை தாக்கும். உங்கள் ரெஜிஸ்ட்ரியை தாக்கிவிட்டால் உங்களால் ஹிடன் போல்டர்களை காண இயலாது.

வைரஸால் தாக்கப்பட்ட ஹிடன் போல்டர்களை மீண்டும் காண்பதற்க்கு நீங்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்யவேண்டி வரும். ஆனால் இது மிகவும் சிக்கல் வாய்ந்தது. நீங்கள் “kill_amvo_virus_usb_en.vbs” எனும் வி.பி ஸ்கிரிப்ட் மூலம் எளிதில் போஃல்டர் வைரஸ்களை அழித்துவிடலாம்.

எனது கணிணி இரு நாட்க்களுக்கு முன் இந்த போல்டர் வைரஸால் தாக்கப்பட்டது நான் “kill_amvo_virus_usb_en.vbs” உதவியுடன் எளிதில் தீர்த்தேன்.


http://www.mygeekside.com/downloads/2007/12/kill_amvo_virus_usb_en.vbs

மேலே உள்ள லிங்க் மூலம் நீங்கள் “kill_amvo_virus_usb_en.vbs” டவுன்லோடு செய்து கொள்லாம்.

நீங்கள் டவுன்லோடு செய்த “kill_amvo_virus_usb_en.vbs” - ஐ டபுள் கிளிக் செய்து ரன் செய்யவும். தற்பொழுது உங்கள் கணிணியில் இருந்து முழுதாக போல்டர் வைரஸ்கள் நீக்கப்பட்டிருக்கும்.

உங்கள் கணிணியில் வைரஸ் இருந்தால் ஸ்கிரிப்ட்டை முயன்றுபாருங்கள் 100 % வேலை செய்யும்.

2 comments:

web site hit counter