Wednesday, March 5, 2008

விண்டோஸ் SKY – DRIVE

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் புதிதாக அறிமுகபடுத்த பட்ட ஒரு வெப் அப்ளிகேஷன். இந்த SKY – DRIVE , இதன் மூலம் உங்களுக்கென தனி சேமிப்பு பகுதியினை பெறலாம். அதில் உங்கள் தனி பட்ட பைல்கள் மற்றும் டாக்குமெட்ஸ்களையும் பாதுகாத்து வைக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் File களை ஷேர் செய்யலாம்.

இந்த அப்ளிகேஷனை உபயோக படுத்த ஹாட்மெயிலில் உங்களுக்கு கணக்கு இருப்பது அவசியம். அவ்வாறு இல்லை எனில் புதிதாக ஒரு கணக்கிணை தொடங்கி உபயோக படுத்தாலாம்.

உங்கள் இண்டர்நெட் எக்ஸ்புலோரரில்
http://skydrive.live.com/ என்ற முகவரியில் டைப் செய்து இதனை பயன்படுத்த இயலும்.



படம் :- 1



வலது புற ஓரத்தில் Sign – in ஐ கிளிக் செயது உங்கள் User name & Password ஐ கொடுத்த பின்னர் .. படம் 2 ல் காட்டியது போல் உங்கள் திரை யில் தெரியும்.


படம் :- 2


இதில் உள்ள போஃல்டர்களில் மூன்று வகை படுத்த பட்டுள்ளன


1.Personal Folders : - நீங்கள் மட்டிலும் அனுக இயலும்.

2.Shared Folders : - உங்கள் நண்பர்களும் அனுகலாம்.

3.Public Folders : - உலகில் யாவராலும் அனுக இயலும்.



இந்த போஃல்டர்களில் எப்படி உங்கள் பைல்களை பதிவு செய்வது? உங்களுக்கான போஃல்டர் ஐ தெரிவு செய்த பின்னர் . வலது புற ஓரத்தில் Add New ஐ கிளிக் செய்க. பின்னர் உங்கள் திரையில் படம் 3 ல் உள்ளது போல் தோன்றும்.


படம் :-3


உங்கள் கணினியில் உள்ள பைல் ஐ தெரிவு செய்தபின்னர் Upload ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பைல் SKY – DRIVE - ல் பதிவிரக்கம் செய்யப்படும். ஒவ்வறு போஃல்டர்களின் ஆப்ஷன்களை யும் நீங்கள் எந்த நேரத்திலும் எளிதில் மாற்ற இயலும்.

ஒரு போஃல்டர்க்குள் நீங்கள் எத்தனை போஃல்டர் களை வேண்டுமானாலும் ஏற்படுத்திக்கொள்ளலாம். போஃல்டர் களின் பெயரை மாற்றவோ , இல்லை அழிக்கவோ
போஃல்டர் ஆப்ஷன் ஐ தெரிவு செய்து மாற்றங்களை செய்ய இயலும்.


Iframe :-

உங்கள் SKY – DRIVE பைல்களை உங்கள் Blog களுக்கு லிங்க் செய்யலாம் அதற்க்கு போஃல்டர் ல் Embed கிளிக் செய்ய படம் 5 திரையில் தோன்றும்


படம்:-4



படம் :- 5

படம் 5 ல் உள்ள HTML – Code ஐ காப்பி செய்து உங்கள் Blog ல் பதிவு செய்த பின்னர்


தற்பொழுது உங்கள் Blog ல் அழகான Iframe தோன்றும் பார்க்க படம் 6


web site hit counter