Monday, January 21, 2008

கல்விக்கடன் பெறுவது எப்படி?

நமது மாநில அரசும் மத்திய அரசும் கல்வி கடன் வழங்கி வருகின்றது. நம்மில் பலருக்கு இந்த கல்விக்கடனை பற்றிய விபரம் தெறியாமல் தமது , பிள்ளைகளின் கல்வியை வீணடித்து விடுகின்றனர் சில பெற்றோற்கள்.

1.முதலில் உங்கள் பெற்றோருக்கு உள்ளூர் வங்கி கணக்கு அவசியம் இருத்தல் வேண்டும்.
2.நீங்கள் கல்லூரியில் சேரும் முன்னரோ அல்லது சேர்ந்த பின்னறோ கூட நீங்கள் கல்விக்கடன் பெறலாம்.
3.உங்கள் உள்ளூர் வங்கியில் வங்கி மேளாளரை அணுகி உங்களை முதலில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் அவ்வமயம் உங்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அவசியம் இருத்தல் வேண்டும்.
4.பின்னர் உங்கள் கல்லூரியில் உங்கள் படிப்பிற்கான செலவு தொகை ஆண்டு கட்டண விபரம் மற்றும் நீங்கள் விடுதியில் தங்கி பயிலும் மாணவராயின் விடுதி கட்டண விபரங்களை யும் பெறவேன்டும்.
5.கல்லூரியில் இருந்து பெறபட்ட விபரங்களை வங்கி மேளாளரிடம் சமர்பித்து உங்களுக்கான கடன் உதவி தொகையை எளிய முறையில் பெறலாம்.
6.பின்னர் உங்களுக்கான கடன் உதவி தொகை நேரடியாக கல்லூரி முதல்வர் அவர்களுக்கு காசோலையாக உங்களிடம் வழங்கப்படும்
7.இந்த கடன் உதவிக்கான ஆண்டு வட்டி விகிதம் இந்தியன் வங்கியில் 12% ஆகும். வங்கிக்கு வங்கி இந்த வட்டி விகிதம் மாறுபடும்
8.உங்கள் கல்விக் கடனை ஐந்து ஆண்டுகளுக்குள் வங்கிக்கு திருப்பி செலுத்துதல் அவசியமாகும்.

9.மேலும் விபரங்களுக்கு http://www.indian-bank.com/educational_loan.htm என்ற முகவரியை அனுகவும்

No comments:

web site hit counter