Monday, January 21, 2008

எங்கள் ஊர்

ஆயங்குடி கிராமம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. எங்கள் ஊரில் முதன்மை தொழில் விவசாயமாகும் , ஊரின் மக்கள் தொகை 7500 க்கும் மேல் , பெரும்மாலான இளைஞர்கள் கல்வி மற்றும் தொழில் துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் எங்கள் ஊரில் தண்ணீர் வசதி அனைத்து வீடுகளுக்கும் ஊரில் உள்ள பெரிய பள்ளி வாசல் மற்றும் நடு பள்ளி வாசல் குடி நீர் தொட்டி மூலம் தடையின்றி வழங்க படுகின்றது இதனால் மக்கள் எளிதாக தண்ணீர் வசதி பெருகின்றனர்.

எங்கள் ஊரில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெறும் மாணவ , மாணவிகளுக்கு ஊரில் உள்ள ஒரு அறக்கட்டளையின் சாற்பாக சன்மாணம் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது மேலும் முதலிடம் பெற்ற மாணவ , மாணவியரின் பெயரினை பள்ளியின் சுவற்றில் அச்சிடுகின்றனர் இது கால சுவட்டில் நிலைத்து நின்று அவர்களை பெறுமை படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆயங்குடியில் உள்ள தொண்டு நிறுவணங்கள் மூலம் ஆண்டுக் கொரு முறை ஏழை மாணவர்களுக்கு இலவச பாட ஏடுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப் படுகின்றது இது பெருமைக்குறிய விசயமாகும்.

No comments:

web site hit counter